மொபைல்ஸ்

வலைதளத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 11 அம்சங்கள்!

Published On 2022-12-23 09:39 IST   |   Update On 2022-12-23 09:39:00 IST
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமாகிறது.
  • முதற்கட்டமாக புதிய ஒன்பிளஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீடு அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி விட்டது. இந்த நிலையில், ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

முன்னதாக இதே ஸ்மார்ட்போன் அன்டுடு வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் PBH110 மாடல் கோட் கொண்டிருந்த ஸ்மார்ட்போன் 1.3 மில்லியனுக்கும் அதிக புள்ளிகளை பெற்று அசத்தியது. தற்போது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் அம்சங்கள் TENAA வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 11 மாடலில் 6.7 இன்ச் QHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், எட்டு கோர்கள் கொண்ட சிபியு- அதாவது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 12 ஜிபி, 16 ஜிபி ரேம், 256 ஜிபி, 512 ஜிபி மெமரி, 4870 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP டெலிபோட்டோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 8.53mm தடிமனாக இருக்கும் ஒன்பிளஸ் 11 ஒட்டுமொத்தத்தில் 205 கிராம் எடை கொண்டுள்ளது. இதில் 5ஜி சப்போர்ட் உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படலாம்.

முந்தைய டீசர்களிலேயே ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஹேசில்பிலாட் கேமரா டியுனிங், அலெர்ட் ஸ்லைடர் இடம்பெற்று இருக்கும் என தெரியவந்தது. வரும் வாரங்களில் புது ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News