மொபைல்ஸ்

அதிரடி அம்சங்களுடன் அறிமுகமான ஒன்பிளஸ் 10T

Update: 2022-08-04 05:03 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடலாக ஒன்பிளஸ் 10T இருந்து வந்தது.
  • புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் புதிய டாப் எண்ட் மாடல் ஆகும். இதில் 6.7 இன்ச் FHD+ 10-பிட் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1 கொண்டு இருக்கிறது. இத்துடன் மூன்று முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்து உள்ளது. இதுவரை வெளியான ஒன்பிளஸ் மாடல்களில் இல்லாத அளவுக்கு புது மாடலில் அதிநவீன கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புது ஸ்மார்ட்போனில் அலெர்ட் ஸ்லைடர் நீக்கப்பட்டு, சிறப்பான ஆண்டெனா சிக்னல்கள் கிடைக்க ஏதுவாக 15 தனித்தனி ஆண்டெனாக்கள் சாதனத்தை சுற்றிலும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எனினும், இந்த ஸ்மார்ட்போன் மிக மெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது.


ஒன்பிளஸ் 10T அம்சங்கள்

:- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED 10-பிட் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

- அதிகபட்சம் 3.2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

- அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU

- 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி

- 12 ஜிபி / 16 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி

- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1

- டூயல் சிம் ஸ்லாட்

- 50MP பிரைமரி கேமரா, f/1.8, OIS

- 8MP 119.9° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2

- 2MP கேமரா, f/2.4, டூயல் எல்இடி பிளாஷ்

- 16MP செல்பி கேமரா, f/2.4

- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

- யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax 2X2 MIMO, ப்ளூடூத் 5.1

- யுஎஸ்பி டைப் சி

- 4800 எம்ஏஹெச் பேட்டரி

- 150 வாட் சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் ஜேட் கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 54 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 55 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு அமேசான், ஒன்பிளஸ் இந்தியா வலைதளங்கள், ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர், க்ரோமா மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News