மொபைல்ஸ்

ஒன்பிளஸ் 10R ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம்

Update: 2022-09-23 04:08 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 10R பிரைம் புளூ எடிஷன் ஸ்மார்ட்பஓன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • புது நிறம் சேர்க்கும் பட்சத்தில் இந்தியாவில் ஒன்பிளஸ் 10R மாடல் தற்போது மூன்ற விதமான நிறங்களில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 10R மாடல் சியரா பிளாக் மற்றும் பாரஸ்ட் கிரீன் என இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

புதிய ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் மாடல் அமேசான் நிறுவனத்துடன் ஒன்பிளஸ்-இன் நீண்ட பயணத்தை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மற்ற இரு நிறங்களை போன்று இல்லாமல் புதிய பிரைம் புளூ எடிஷன் கிரேடியண்ட் பினிஷ் கொண்டிருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் ஒருபுறம் புளூ நிறத்தில் இருந்து மறுபுறம் வைலட் நிறத்திற்கு மாறுகிறது. நிறம் தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

அந்த வகையில் ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் மாடலிலும் 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்பி கேமரா, பிராஸ்டட் கிளாஸ் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் பிரத்யேகமாக நடைபெறுகிறது.

Tags:    

Similar News