மொபைல்ஸ்

ஸ்மார்ட்போன் விலையில் ரூ. 5 ஆயிரம் குறைப்பு - ஒன்பிளஸ் அதிரடி!

Published On 2022-11-21 09:08 GMT   |   Update On 2022-11-21 09:08 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை இருவித ரேம், மெமரி ஆப்ஷன்களில் விற்பனை செய்கிறது.
  • அடுத்த ஆண்டு துவக்கத்தில் முற்றிலும் புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போனினை ஒன்பிளஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மாரட்போன் விலை இந்தியாவில் ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இரண்டு ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ஒன்பிளஸ் 10 ப்ரோ விலை ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதே விலை அமேசான் மற்றும் ஒன்பிளஸ் சில்லறை விற்பனை மையங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. எனினும், இந்த விலை குறைப்பு நிரந்தரமானதா அல்லது குறுகிய காலத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 66 ஆயிரத்து 999 விலையில் வெளியிடப்பட்டது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது விலை குறைப்பின் படி இரு வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 61 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 66 ஆயிரத்து 999 என மாற்றப்பட்டு இருக்கிறது.

அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளத்தில் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் 10 ப்ரோ விலையை மேலும் குறைக்க முடியும். கூடுதலாக ஒன்பிளஸ் பட்ஸ் Z2 மாடலை ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் வாங்கிட முடியும். ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஒன்பிளஸ் பட்ஸ் Z2 உண்மையான விலை ரூ. 5 ஆயிரத்து 499 ஆகும்.

அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் QHD+ வளைந்த AMOLED டிஸ்ப்ளே, LTPO 2.0 தொழில்நுட்பம், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 8MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News