மொபைல்ஸ்

இணையத்தில் லீக் ஆன ரெண்டர்கள்.. வேற லெவலில் காட்சியளிக்கும் நத்திங் போன் 2a

Published On 2024-02-23 12:20 GMT   |   Update On 2024-02-23 12:20 GMT
  • புதிய ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கும்.
  • பின்புற கேமராவை சுற்றி க்ளிம்ப் லைட்கள் உள்ளன.

நத்திங் நிறுவனம் விரைவில் தனது புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், புதிய நத்திங் ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில், நத்திங் போன் 2a மாடலின் ரெண்டர்கள் நத்திங் கம்யூனிட்டி வலைதளத்தில் வெளியானது. அதன்படி புதிய நத்திங் போன் 2a மாடல் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. முன்னதாக அந்நிறுவனம் வெளியிட்ட டீசர்களில் புதிய ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 


தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமராவை சுற்றி க்ளிம்ப் லைட்கள், ஸ்கிரீனை சுற்றி மெல்லிய பெசல்கள் உள்ளன. இதன் பின்புறம் சார்ஜிங் காயில் இடம்பெறவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் வழங்கப்பட்டுள்ள போதிலும், பிளாஸ்டிக் பேக் பேனல் வழங்கப்படும் என தெரிகிறது.

முன்னதாக நத்திங் அறிமுகம் செய்த நத்திங் போன் 1 மற்றும் போன் 2 மாடல்களில் கிளாஸ் பேக் வழங்கப்பட்டு இருந்தது. புதிய மாடலில் பிளாஸ்டிக் பேக் பேனல் வழங்குவதன் மூலம் அதன் உற்பத்தி செலவீனங்களை பெருமளவு குறைக்க முடியும். இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலையும் குறைவாக நிர்ணயம் செய்ய முடியும்.

 


புதிய நத்திங் போன் 2 மாடலில் டிமென்சிட்டி 7200 ப்ரோ பிராசஸர் வழங்கப்படும் என அந்நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டது. இத்துடன் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், ரேம் பூஸ்ட் அம்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் நத்திங் நிறுவனத்தின் விளம்பர தூதராக பாலிவுட் பிரபலம் ரன்வீர் சிங் நியமிக்கப்பட்டு இருப்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், நத்திங் நிறுவன விளம்பரங்களில் இனி ரன்வீர் சிங் தோன்றுவார்.

Tags:    

Similar News