மொபைல்ஸ்

ஜூலை 11-ல் அறிமுகமாகும் நத்திங் போன் (2) - அசத்தல் டீசர் வெளியீடு!

Published On 2023-06-14 01:12 GMT   |   Update On 2023-06-14 01:12 GMT
  • நத்திங் போன் (2) மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது.
  • இந்திய நேரப்படி ஜூலை 11-ம் தேதி இரவு 8.30 மணிக்கு அறிமுக நிகழ்வு துவங்க இருக்கிறது.

நத்திங் நிறுவனம் தனது போன் (2) மாடலின் வெளியீடு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போன் ஆகும். கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி நத்திங் போன் (1) மாடல் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெளியீட்டு தேதி அடங்கிய டீசரில், "Come to the bright side" வாசகமும், எல்இடி லைட்கள், ஆக்டோபஸ் படமும் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் போக்கிமானில் உள்ள அல்காசம் என்ற குறியீட்டு பெயர் இடம்பெற்றுள்ளது.

நத்திங் போன் (2) மாடலில் வளைந்த டிசைன், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்து விட்டது. முந்தைய நத்திங் போன் (1) மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நத்திங் போன் (2) மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை சந்தையில் அறிமுகமாகி இருக்கும் மாடல்களை விட சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மாடலாக இருக்கும் என்று நத்திங் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்திக்கான கார்பன் வெளியீடு அதன் முந்தைய மாடலை விட 8.6 சதவீதம் குறைவு ஆகும்.

சர்வதேச வெளியீட்டின் போதே நத்திங் போன் (2) மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய நேரப்படி ஜூலை 11-ம் தேதி இரவு 8.30 மணிக்கு அறிமுக நிகழ்வு துவங்க இருக்கிறது. முந்தைய வழக்கப்படி நத்திங் போன் (2) மாடலின் விற்பனை அறிமுக நிகழ்வை தொடர்ந்து ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது.

Photo Courtesy: Onleaks | Smartprix

Tags:    

Similar News