மொபைல்ஸ்

பொது மக்கள் கோரிக்கையை ஏற்ற மோட்டோரோலா - எதில் தெரியுமா?

Published On 2022-09-18 11:51 GMT   |   Update On 2022-09-18 11:51 GMT
  • மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தான் எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
  • தற்போது பொது மக்கள் கோரிக்கையை ஏற்று மோட்டோரோலா அசத்தல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

அசத்தல் வடிவமைப்பு, கேமரா மற்றும் அம்சங்கள் என மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பல்வேறு பிரிவுகளில் நல்ல வரவேற்பை பெற்றது. எனினும், இதன் ஸ்டோரேஜ் விவரங்களில் மோட்டோரோலா பலரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியதாக ஸ்மாபர்ட்போன் வெளியீட்டுக்கு பின் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்தை போக்கும் வகையில் மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலை அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.


இத்துடன் 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட FHD+ ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 200MP பிரைமரி கேமரா, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. பிளாக்‌ஷிப் தர அம்சங்களை கொண்டிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா அதிகளவு ரேம் மற்றும் மெமரி இன்றி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் விலை ரூ. 50 ஆயிரத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

புதிய அறிவிப்பின் படி மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் புது வெர்ஷன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது. 200MP கேமரா, 8K தர வீடியோ பதிவு செய்யும் வசதி கொண்ட ஸ்மார்ட்போனில் 128 ஜிபி என்பது மிகவும் குறைந்த மெமரி ஆகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மெமரியை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படவில்லை.

Tags:    

Similar News