மொபைல்ஸ்

இந்தியாவில் அறிமுகமான புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் - விலை இவ்வளவு தானா?

Published On 2023-03-10 08:46 GMT   |   Update On 2023-03-10 08:46 GMT
  • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G ஸ்மார்ட்போன் டூயல் கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.
  • புதிய மோட்டோ G மாடல் 30 வாட் டர்போ சார்ஜிங் வசதியுடன், 13 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

மோட்டோரோலா நிறுவனம் இந்தய சந்தையில் தனது புதிய மோட்டோ G73 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மோட்டோ G73 5ஜி மாடலில் 6.5 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 930 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டிமென்சிட்டி 930 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை மோட்டோ G73 5ஜி பெற்று இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோ G73 5ஜி ஆண்ட்ராய்டு 14+ அப்டேட், மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு ஆட்டோஃபோக்கஸ் கேமரா, 16MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோ G73 5ஜி மாடலில் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 30 வாட் டர்போசார்ஜிங் வசதி, அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

 

மோட்டோ G73 5ஜி அம்சங்கள்:

6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 930 பிராசஸர்

IMG BXM 8 - 256 GU

8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 13

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா

8MP அல்ட்ரா வைடு கேமரா

16MP செல்ஃபி கேமரா

3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

30 வாட் டர்போ பவர் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

மோட்டோ G73 5ஜி ஸ்மா்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் லுசெண்ட் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை மார்ச் 16 ஆம் தேதி ஃப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

அறிமுக சலுகைகள்:

கிரெடிட் கார்டு மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி அல்லது உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியை பெறலாம்.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ. 5 ஆயிரத்து 050 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ்கள், மிந்த்ரா மற்றும் ஜூம்இன் சேர்த்து ரூ. 1050 வரையிலான கேஷ்பேக், ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான கேஷ்பேக் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News