மொபைல்ஸ்

சூப்பர் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமான புது மோட்டோ ஸ்மார்ட்போன்

Published On 2022-08-10 04:14 GMT   |   Update On 2022-08-10 04:14 GMT
  • மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
  • புதிய மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டோ G32 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.5 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்படும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்படும் என்றும் மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ G32 ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு+டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா கொண்டுள்ளது.


மோட்டோ G32 அம்சங்கள்:

- 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ மேக்ஸ்விஷன் 20:9 LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 680 6nm பிராசஸர்

- அட்ரினோ 610 GPU

- 4 ஜிபி LPDDR4X ரேம்

- 64 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யுஎக்ஸ்

- ஹைப்ரிட் டூயல் சிம்

- 50MP பிரைமரி கேமரா, f/1.8

- 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2, டெப்த் அம்சம்

- 2MP மேக்ரோ கேமரா, f/2.4, LED பிளாஷ்

- 16MP செல்பி கேமரா, f/2.2

- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், எப்எம் ரேடியோ

- பக்கவாட்டில் கைரேகை சென்சார்

- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

- யுஎஸ்பி டைப் சி

- 5000 எம்ஏஹெச் பேட்டரி

- 30 வாட் டர்போ சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய மோட்டோ G32 ஸ்மார்ட்போன் சேடின் சில்வர் மற்றும் மினரல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி துவங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி மாத தவணை முறையில் வாங்கும் போது ரூ. 1,250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News