மொபைல்ஸ்

இந்தியாவில் Z சீரிஸ் ஸ்மார்ட்போனை அப்டேட் செய்யும் ஐகூ - டீசர் வெளியீடு

Published On 2024-02-20 11:59 GMT   |   Update On 2024-02-20 11:59 GMT
  • முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஐகூ Z9 பெறும்.
  • ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டு இருந்தது.

ஐகூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஐகூ Z9 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐகூ Z7 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஐகூ டீசர் வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறது.

இதற்கான டீசரில் புதிய ஸ்மார்ட்போன் இரட்டை பிரைமரி கேமரா, OIS வசதி மற்றும் பின்புற பேனலில் பேட்டர்ன் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த பிரிவில் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஐகூ Z9 பெறும் என ஐகூ தெரிவித்துள்ளது.

 


இந்த ஸ்மார்ட்போனில் சோனி IMX882 சென்சார் மற்றும் OIS வசதி வழங்கப்படுகிறது. இதே கேமரா சென்சார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டு இருந்தது.

புதிய ஸ்மார்ட்போனில் 120Hz OLED ஸ்கிரீன், 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. சமீபத்தில் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றிருந்த ஐகூ Z9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ்., அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 1.5K OLED டிஸ்ப்ளே, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News