மொபைல்ஸ்

வேற லெவல் அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ஐகூ

Published On 2025-07-26 14:15 IST   |   Update On 2025-07-26 14:16:00 IST
  • ஐகூ Z10 டர்போ பிளஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வெய்போ தளத்தில் ஐகூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
  • ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400+ சிப், 16GB ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டுள்ளது.

ஐகூ Z10 டர்போ பிளஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய டர்போ சீரிஸ் வெளியீட்டை ஐகூ நிறுவனம் நேற்று சீனாவில் அறிவித்தது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் சிப்செட் மற்றும் பேட்டரி திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் ஐகூ Z10 டர்போ பிளஸ் தற்போதுள்ள Z10 டர்போ சீரிசில் இணையும். இது தற்போது ஐகூ Z10 டர்போ மற்றும் Z10 டர்போ ப்ரோ மாடல்களைக் கொண்டுள்ளது.

ஐகூ Z10 டர்போ பிளஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வெய்போ தளத்தில் ஐகூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் நிறுவனத்தின் டிமென்சிட்டி 9400+ சிப்செட் மூலம் இயக்கப்படும் மற்றும் 8,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இல்லை என்றாலும், அது சமீபத்தில் கீக்பென்ச் தள்தில் விவோ V2507A என்ற மாடல் எண்ணின் கீழ் தோன்றியது. இது ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400+ சிப், 16GB ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டுள்ளது.

இதுவரை வெளியான தகவல்களின்படி, ஐகூ Z10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் 90W அதிவேக சார்ஜிங்கை ஆதரிக்கும். இது 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைடு லென்ஸ் இடம்பெறக்கூடும். இது 16MP செல்பி கேமரா கொண்டிருக்கும்.

Tags:    

Similar News