மொபைல்ஸ்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்ட ஐகூ 11 வெளியீட்டு தேதி அறிவிப்பு

Update: 2022-11-23 07:58 GMT
  • ஐகூ நிறுவனம் புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய ஐகூ 11 மாடல் அதிகபட்சம் 200 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

விவோ நிறுவனத்தின் துணை பிராண்டு ஐகூ குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்ட தனது முதல் ஸ்மார்ட்போன் டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக ஐகூ 11 ஸ்மார்ட்போன் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் ஐகூ 11 அறிமுகமாகும். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

சமீபத்தில் தான் விவோ நிறுவனம் விவோ X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இதன் துணை பிராண்டு ஐகூ தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஐகூ மலேசியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் "மான்ஸ்டர்" பேட்டரி கொண்டிருக்கும் என ஐகூ வெளியிட்டு இருக்கும் டீசரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இத்துடன் ஐகூ 11 மாடல் 5ஜி வசதி கொண்டிருக்கும் என்றும் டீசரில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐகூ 10 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 200 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கும் என எதிர்பார்க்கலாம். சீனாவில் விற்பனை செய்யப்படும் ஐகூ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் ஆக பத்து நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. ஐகூ 10 ஸ்மார்ட்போனில் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் பல்வேறு புது வசதிகளை வழங்கும் என எதிர்பார்க்கலாம். புதிய குவால்காம் பிராசஸர் முந்தைய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1-ஐ விட 4.35X சிறப்பான ஏஐ அம்சங்கள், 40 சதவீத அதிக மின்திறன் பயன்பாடு, 25 சதவீதம் வேகமான GPU திறன் கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News