மொபைல்ஸ்

விரைவில் அறிமுகமாகும் ஐகூ 11 - அதிகாரப்பூர்வ டீசர் வெளியானது

Published On 2022-11-17 04:08 GMT   |   Update On 2022-11-17 04:08 GMT
  • ஐகூ நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • மேலும் புதிய ஸ்மார்ட்போனிற்கென அதிகாரப்பூர்வ டீசர் அந்நிறுவன சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

விவோ நிறுவனம் ஐகூ பெயரில் துணை பிராண்டை 2019 வாக்கில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் 2020 பிப்ரவரி மாத வாக்கில் ஐகூ களமிறங்கியது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே ஐகூ பிராண்டு இரண்டு நாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. மலேசிய நாட்டில் கடந்த சில வாரங்களாக புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை ஐகூ தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வந்தது.

தற்போது ஐகூ மலேசியா ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்கான டீசரில் ஐகூ 11 5ஜி அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனுடன் பிஎம்டபிள்யூ M மோட்டார்ஸ்போர்ட்-ஐ சார்ந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

இந்த மாடல் ரெட், பிளாக் மற்றும் புளூ நிற ஸ்டிரைப்களை கொண்டிருக்கும் என்றும் ஐகூ 11 லெஜண்ட் பெயரில் அறிமுகமாக இருக்கிறது. புதிய லெஜண்ட் மாடலில் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர புது லெஜண்ட் மாடல் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

நவம்பர் மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் ஐகூ 11 மற்றும் ஐகூ 11 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ஐகூ புது ஸ்மார்ட்போன்களின் டீசரை மலேசியாவில் வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில், இதே காலக்கட்டத்தில் புது ஸ்மார்ட்போன் சீனாவிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

சீனா மற்றும் மலேசியா மட்டுமின்றி இந்திய சந்தையிலும் புதிய ஐகூ 11 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், இந்தியாவில் ஐகூ 11 சீரிஸ் மாடல்கள் டிசம்பர் அல்லது ஜனவரி மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

அம்சங்களை பொருத்தவரை ஐகூ 11 மாடலில் 6.78 இன்ச் E6 AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், LPDDR5 ரேம், UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 16MP செல்பி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ கேமரா, விவோ வி2 ISP சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 3 மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News