மொபைல்ஸ்

அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது ஐகூ நிறுவனம்

Published On 2022-07-12 09:25 GMT   |   Update On 2022-07-12 09:25 GMT
  • ஐகூ 10 ப்ரோ மாடலில் மட்டுமே 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
  • அதன் ஐகூ 10 மாடலில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மட்டுமே வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐகூ நிறுவனம் அதன் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. வெண்ணிலா ஐகூ 10 மற்றும் ஐகூ 10 ப்ரோ ஆகிய மாடல்கள் ஐகூ 10 சீரிஸில் இடம்பெற்று உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை 19-ந் தேதி சீன சந்தையில் அறிமுகம் ஆக உள்ளது. வெளியீட்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில் 10 சீரிஸ் மாடல்களில் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என ஐகூ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இதன்மூலம் உலகின் அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. ஐகூ 10 ப்ரோ மாடலில் மட்டுமே 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும், அதன் ஐகூ 10 மாடலில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மட்டுமே வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தற்போதைய தகவல்படி 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் ஐகூ 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 0 முதல் 63 சதவீதம் வரை ஐந்து நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும் என தெரியவந்துள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. விரைவில் அதுவும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News