இரட்டை கேமரா சென்சார்களுடன் உருவாகும் ஐபோன் ஏர் 2?
- ஐபோன் ஏர் 2 அம்சங்களை பொருத்தவரை, இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
- ஆக்ஷன் பட்டனுடன் சேர்ந்து, ஐபோனின் இடது பக்கத்தில் வால்யூம் கண்ட்ரோல்கள் இடம்பெற்று இருக்கும்.
ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் தனது மிக மெல்லிய ஐபோன் மாடல்- "ஐபோன் ஏர்" அறிமுகம் செய்தது. ஐபோன் ஏர்-ஐ விட, ஐபோன் ஏர் 2 பெருமளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் ஏர் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும், ஐபோன் ஏர் 2 மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன் ஏர் 2 ரெண்டர் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. ரெண்டரில் புதிய ஐபோனின் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. மிக மெல்லிய மற்றும் லேசான கைபேசியின் சில முக்கிய அம்சங்களை ஒரு டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார்.
ஐபோன் ஏர் 2 அதன் முந்தைய மாடலை போலவே அதே அளவிலான தோற்றம் கொண்டிருக்கலாம். மீண்டும் மீண்டும் மேம்படுத்தல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், கேமரா துறையில் இது ஒரு பெரிய அப்டேட் பெறும் என்று தெரிகிறது.
ஐபோன் ஏர் 2 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
சீனாவின் வெய்போ தள பதிவில், டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் ஐபோன் ஏர் 2 ரெண்டரை பகிர்ந்துள்ளது. இது அதன் வடிவமைப்பைக் காட்டுகிறது. இந்த போன் அதன் முந்தைய மாடலை போலவே வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேலும், புதிய ஐபோன் ஏர் 2 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம்.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் படச்த்தில், இந்த ஆண்டு வெளியாகி இருக்கும் ஐபோன் ஏர் மாடலை விட இது குறிப்பிடத்தக்க அப்டேட் பெறக்கூடும். புதிய ஐபோன் ஏர் மாடலில் 48MP பிரைமரி கேமராவுடன் வருகிறது.
மற்ற வடிவமைப்புகள் ஐபோன் ஏர் போலவே இருக்கும் என்று தெரிகிறது. ஆக்ஷன் பட்டனுடன் சேர்ந்து, ஐபோனின் இடது பக்கத்தில் வால்யூம் கண்ட்ரோல்கள் இடம்பெற்று இருக்கும். பின்புற பேனலில் இரண்டு கேமரா லென்ஸ்கள், ஒரு பிரத்யேக மைக்ரோபோன் மற்றும் ஒரு எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்ட மாத்திரை வடிவ கேமரா பம்ப் இடம்பெறலாம்.
ஐபோன் ஏர் 2 அம்சங்களை பொருத்தவரை, இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. புகைப்படங்கள் எடுக்க ஐபோன் ஏர் 2 மாடலில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா-வைடு கேமரா கொண்டிருக்கலாம்.