மொபைல்ஸ்

அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் இன்பினிக்ஸ்

Published On 2024-03-20 12:34 GMT   |   Update On 2024-03-20 12:34 GMT
  • புதிய ஸ்மார்ட்போன்களில் சீட்டா X1 பிராசஸர் வழங்கப்படுகிறது.
  • நோட் 40 ப்ரோ பிளஸ் மாடலில் 100 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது நோட் 40 ப்ரோ 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக இவை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போனில் ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக இன்பினிக்ஸ் அறிவித்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் 20 வாட் வயர்லெஸ் மேக் சார்ஜிங், வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற வசதிகளை வழங்குகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கேஸ் வகையில் சார்ஜ் ஏற்றும் மேக்பவர் சாதனம் வழங்கப்படும் என தெரிகிறது.

 


நோட் 40 ப்ரோ மற்றும் நோட் 40 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இன்பினிக்ஸ் சொந்தமாக உருவாக்கிய முதல் பிராசஸர்- சீட்டா X1 கொண்டிருக்கிறது. இவற்றில் ப்ரோ பிளஸ் மாடலில் 100 வாட் மல்டி-ஸ்பீடு ஃபாஸ்ட் சார்ஜ் வசதி உள்ளது. இது ஸ்மார்ட்போனில் உள்ள 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரியை ஹைப்பர் மோடில் எட்டு நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடும்.

இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மாடலில் உள்ள 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஸ்மார்ட்போனை 26 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும். இரு மாடல்களிலும் 6.78 இன்ச் FHD+ 3D கர்வ்டு 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 108MP பிரைமரி கேமரா, OIS, லாஸ்லெஸ் சூப்பர்ஜூம் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த எக்ஸ் ஒ.எஸ். 14 வழங்கப்படுகிறது.

புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Tags:    

Similar News