மொபைல்ஸ்

ஐபோன் Flip உருவாக்கும் ஆப்பிள் - லீக் ஆன புது தகவல்

Published On 2024-02-08 09:40 GMT   |   Update On 2024-02-08 09:40 GMT
  • கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
  • மடிக்கக்கூடிய ஐபேட்-ஐ உருவாக்கி வருவதாக தகவல்.

ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய போன்கள் பொறியாளர்களுக்கு அதிக சவால் நிறைந்த சாதனமாக இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஃப்ளிப்-ஸ்டைல் ஐபோன் மாடல்களை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் மட்டுமின்றி மடிக்கக்கூடிய ஐபேட் மாடலையும் ஆப்பிள் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் மடிக்கக்கூடிய சாதனம் என கூறி ஏராளமான காப்புரிமைகள் வெளியாகி இருக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் உருவாக்கி இருக்கும் இரண்டு ப்ரோடோடைப் மாடல்களும் அதன் ஆரம்பகட்ட நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது.

இவற்றின் உற்பத்தி அடுத்த ஆண்டு வரையிலும் துவங்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ ஆப்பிள் ஃப்ளிப் போன் மாடலின் உற்பத்தி 2026 வாக்கில் துவங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய சாதனத்தின் டிசைன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனில், இந்த திட்டத்தையே ஆப்பிள் நிறுவனம் முழுமையாக ரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது. ப்ளிப் ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபேட் மாடலையும் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News