அதிவேக M5 சிப் மூலம் அப்டேட் செய்யப்பட்ட ஐபேட் ப்ரோ... இந்திய விலை, முழு விவரங்கள்..!
- ஐபேட் ப்ரோவின் செல்லுலார் மாடல்கள் C1X மோடம் கொண்டுள்ளன.
- M5 சிப்செட் உடன் வரும் புதிய ஐபேட் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ப்ரோ சீரிசை அப்டேட் செய்துள்ளது. இவை கடந்த ஆண்டு வெளியான M4 சிப்செட் கொண்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய ஐபேட் ப்ரோ சமீபத்திய M5 சிப்செட் கொண்டிருக்கின்றன.
இந்த டேப்லெட் வழக்கம் போல் 11-இன்ச் மற்றும் 13-இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இவை புதிய M5 சிப்செட் உடன் வருகிறது. இதன் 256GB மற்றும் 512GB மாடல்களில் 9-கோர் CPU உடன் 3 பெர்ஃபார்மன்ஸ் கோர்கள் மற்றும் 12GB RAM உள்ளது. இதன் 1TB மற்றும் 2TB மாடல்களில் 10-கோர் CPU மற்றும் 16GB RAM உள்ளது. இவை இரண்டும் 10-கோர் GPU மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சினைக் கொண்டுள்ளன.
ஐபேட் ப்ரோவின் செல்லுலார் மாடல்கள் C1X மோடம் கொண்டுள்ளன. அவை 50% வேகமான செல்லுலார் தரவு செயல்திறனை உறுதியளிக்கின்றன. மேலும் செயலில் உள்ள செல்லுலார் பயனர்களுக்கு, M4 உடன் ஐபேட் ப்ரோவை விட 30% வரை குறைவான மின் பயன்பாட்டை உறுதியளிக்கின்றன என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
புதிய ஐபேட் ப்ரோ மாடலில், வைஃபை 7, ப்ளூடூத் 6 மற்றும் த்ரெட் ஆகியவற்றை இயக்கும் புதிய ஆப்பிள் வடிவமைத்த வயர்லெஸ் நெட்வொர்க்கிங் சிப்: N1 இடம்பெற்றுள்ளது. 5GHz நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும்போது N1 சிறந்த செயல்திறனைக் கொண்டுவருகிறது. மேலும் பெர்சனல் ஹாட்ஸ்பாட் மற்றும் ஏர் டிராப் போன்ற அம்சங்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறதும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
M5 சிப்செட் உடன் வரும் புதிய ஐபேட் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கிறது. ஆப்பிளின் புதிய 40W டைனமிக் பவர் அடாப்டர், 60W மேக்ஸ் ஆப்ஷனல் யுஎஸ்பி சி பவர் அடாப்டர் பயன்படுத்தி சுமார் 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய உதவுகிறது.
ஐபேட் ப்ரோ (2025) சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது.
புதிய ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை 256 ஜிபி மாடல் ரூ. 99,900 என்றும், ஐபேட் ப்ரோ 11-இன்ச் (வைபை + செல்லுலார்) 256 ஜிபி – ரூ. 1,19,900 என்றும் ஐபேட் ப்ரோ 13-இன்ச் (வை-பை) 256 ஜிபி ரூ. 1,29,900 என்றும்
ஐபேட் ப்ரோ 13-இன்ச் (வைபை + செல்லுலார்) 256 ஜிபி – ரூ. 1,49,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2025 ஐபேட் ப்ரோ மாடல்கள் அக்டோபர் 22ஆம் தேதி முதல் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.