மொபைல்ஸ்

EEC தளத்தில் லீக் ஆன புது போக்கோ ஸ்மார்ட்போன் - விரைவில் வெளியீடு?

Update: 2022-11-24 04:29 GMT
  • போக்கோ நிறுவனம் இம்மாத இறுதியில் புது ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இதுதவிர போக்கோ F4 மற்றும் X4 மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை போக்கோ C50 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய போக்கோ C50 ஸ்மார்ட்போன் இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மட்டுமின்றி போக்கோ F4 மற்றும் X4 மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளிலும் போக்கோ ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், 23049PCD8G எனும் மாடல் நம்பர் போக்கோ ஸ்மார்ட்போன் EEC வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. டிப்ஸ்டர் முகுல் ஷர்மா இந்த போக்கோ ஸ்மார்ட்போன் EEC தளத்தில் கண்டதாக தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என தெரிகிறது.

நவம்பர் மாதத்திலேயே போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய போக்கோ C50 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி A1+ மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் 6.5 இன்ச் IPS LCD பேனல், வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் HD+ ரெசல்யூஷன் வழங்கப்பட இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5MP செல்ஃபி கேமரா, 8MP பிரைமரி கேமரா, 0.08MP இரண்டாவது கேமரா, மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர், 2 ஜிபி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. போக்கோ C50 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்படலாம்.

Tags:    

Similar News