கணினி

புதிய இயர்பட்ஸ் அம்சங்களை பட்டியலிட்டு டீசர் வெளியிட்ட நத்திங்!

Published On 2023-03-16 07:06 GMT   |   Update On 2023-03-16 07:06 GMT
  • நத்திங் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் 2 மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • புதிய இயர்பட்ஸ் LHDC ஆடியோ 5.0, IP54 சான்று பெற்று இருக்கிறது.

நத்திங் நிறுவனம் தனது முதல் இரண்டாம் தலைமுறை சாதனம்- நத்திங் இயர் (2) மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய நத்திங் இயர் (2) மாடல் மார்ச் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தோற்றத்தில் புதிய இயர்பட்ஸ் நத்திங் இயர் (1) போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய மாடலில் மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நத்திங் இயர் (2) மாடலின் அம்சங்கள் அடங்கிய டீசர்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி நத்திங் இயர் (2) மாடலில் IP54 சான்று, LHDC ஆடியோ 5.0 வசதி வழங்கப்படுகிறது. டுவிட்டரில் வெளியாகி இருக்கும் புதிய டீசர்களில் நத்திங் இயர் (2) அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது. நத்திங் இயர் (2) மாடலில் IP54 சான்று, LHDC ஆடியோ 5.0 சப்போர்ட் வழங்கப்படுகிறது.

இது ப்ளூடூத் ஸ்டிரீமிங் மூலம் அதிக தரமுற்ற ஆடியோ வசதியை வழங்குகிறது. நத்திங் நிறுவனர் கார்ல் பெய் ஸ்பாடிஃபை-ஐ தொடர்பு கொண்டு அதன் லைப்ரரியை LHDC-க்கு அப்டேட் செய்ய கோரிக்கை விடுத்திருக்கிறார். இவற்றை கொண்டே புதிய நத்திங் இயர் (2) மாடலில் ஹை-ரெஸ் ஆடியோ வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நத்திங் இயர் (2) மாடல் அதிக காம்பேக்ட் டிசைன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் ANC, டிரான்ஸ்பேரன்சி மோட் உள்ளிட்டவை வழங்கப்படலாம். நத்திங் இயர்பட்ஸ் மற்றும் கேஸ் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கிறது. நத்திங் இயர் (2) மாடல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News