கணினி

பிரீமியம் பிரிவில் இரண்டு புதிய கேமிங் மானிட்டர்களை அறிமுகம் செய்த எல்ஜி!

Published On 2023-08-09 04:30 GMT   |   Update On 2023-08-09 04:30 GMT
  • எல்ஜி 27GR95QE OLED கேமிங் மானிட்டர் 27 இன்ச் அளவு கொண்ட QHD டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
  • எல்ஜியின் புதிய கேமிங் மானிட்டர்கள் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

எல்ஜி எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் தனது முற்றிலும் புதிய பிரீமியம் கேமிங் மானிட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரண்டு புதிய மாணிட்டர்கள் 45GR95QE மற்றும் 27GR95QE என்று அழைக்கப்படுகின்றன. இந்த மானிட்டர்கள் கேமிங் உலகில் தனித்துவம் மிக்க அம்சங்களை வழங்குகின்றன. இதன் மூலம் தலைசிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும்.

புதிய எல்ஜி 45GR95QE மாடல் சீரான கேமிங் அனுபவம், 140Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 0.03ms ரெஸ்பான்ஸ் டைம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 800R கர்வேச்சர் டிசைன் சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இத்துடன் வரும் ஸ்டான்ட் மானிட்டரை சவுகரியமாக வைத்துக் கொள்ள செய்கிறது.

கேமிங் ரிமோட் கன்ட்ரோல் மற்றும் பிளாக் ஸ்டேபிலைசர், டைனமிக் ஆக்ஷன் சின்க் உள்ளிட்டவை கேமர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

எல்ஜி 27GR95QE OLED கேமிங் மானிட்டர் 27 இன்ச் அளவு கொண்ட QHD டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதில் AGLR தொழில்நுட்பம், DCI-P3 98.5% கலர் கமுட், HDR10 சப்போர்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் அல்டிமேட் கான்டிராஸ்ட் ரேஷியோ மற்றும் OLED பிக்சல் டிம்மிங், 240Hz ரிப்ரெஷ் ரேட், 0.3ms GTG ரெஸ்பான்ஸ் டைம் வழங்குகிறது.

இந்த மானிட்டர் VRR, NVIDIA G-SYNC, FreeSync பிரீமியம், VESA அடாப்டிவ் சின்க் உள்ளிட்ட அம்சங்களுக்கு சப்போர்ட் கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை HDMI 2.1x2, டிஸ்ப்ளே போர்ட் 1.4 மற்றும் DSC x1, யுஎஸ்பி 3.0 உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மானிட்டர் 4 பக்க, விர்ச்சுவல் பார்டர்லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது.

புதிய எல்ஜி 45GR95QE 45-இன்ச் WQHD வளைந்த OLED கேமிங் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இதில் 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 800R கர்வேச்சர் உள்ளது. இதில் DCI-P3 98.5% கலர் கமுட், HDR10 சப்போர்ட், 240Hz ரிப்ரெஷ் ரேட், 0.03ms GTG ரெஸ்பான்ஸ் டைம் உள்ளது. இதிலும் HDMI 2.1 VRR (அடாப்டிவ் சின்க்), NVIDIA G-SYNC, AMD FreeSync பிரீமியம் உள்ளிட்ட அம்சங்களுக்கு சப்போர்ட் உள்ளது.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை HDMI 2.1x2, டிஸ்ப்ளே போர்ட் 1.4 மற்றும் DSC x1, யுஎஸ்பி 3.0 மற்றும் ஆடியோவுக்கு ஆப்டிக்கல் ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

எல்ஜி 27GR95QE QHD OLED கேமிங் மானிட்டர் விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அமேசான் வலைதளத்தில் இந்த மானிட்டர் ரூ. 84 ஆயிரத்து 498 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

எல்ஜி 45GR95QE WQHD OLED கேமிங் மானிட்டர் விலை ரூ. 2 லட்சத்து 41 ஆயிரம் ஆகும். இது அமேசான் வலைதளத்தில் ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 997 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News