கணினி

ஸ்டைலிஷ் லுக், வேறலெவல் அம்சங்களுடன் அறிமுகமான புதிய ஸ்மார்ட்வாட்ச்

Update: 2023-03-20 11:30 GMT
  • கிஸ்மோர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் பெரிய டிஸ்ப்ளே, 600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
  • புதிய கிஸ்மோர் வோக் ஸ்மார்ட்வாட்ச் 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்களை கொண்டிருக்கிறது.

கிஸ்மோர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 'வோக்' ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.95 இன்ச் HD டிஸ்ப்ளே, 91 சதவீதம் ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ, ஸ்ப்லிட் ஸ்கிரீன் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. பிரீமியம் தோற்றம் கொண்ட மெட்டல் கேசிங், சதுரங்க வடிவம் கொண்ட டயல் உள்ளிட்டவை இந்த வாட்ச்-ஐ அழகாக காட்சியளிக்கச் செய்கின்றன.

இதில் உள்ள ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 600 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்டவை அதிகப்படியான சூரிய வெளிச்சங்களிலும் ஸ்கிரீனை சிரமம் இன்றி பார்க்க செய்கிறது. இத்துடன் பயனர்களுக்கு 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்களை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. கிஸ்மோர் வோக் ஸ்மார்ட்வாட்ச் எளிய நேவிகேஷன் வசதியை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 

கிஸ்மோர் வோக் அம்சங்கள்:

1.95 இன்ச், 320x385 பிக்சல் IPS டிஸ்ப்ளே

600 நிட்ஸ் பிரைட்னஸ், ஸ்ப்லிட் ஸ்கிரீன்

ரக்கட் டிசைன், அலாய் மெட்டல் பாடி, IML கோட்டிங்

டிஜிட்டல் கிரவுன்

ஜிபிஎஸ் டிராஜெக்டரி

குயிக் வயர்லெஸ் சார்ஜிங்

ப்ளூடூத் காலிங்

ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட், வாட்ச் ஃபேஸ்கள்

அதிபட்சம் ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப்

ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள்

IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்

SpO2, ஹார்ட் ரேட், பிரீதிங், ஸ்டிரெஸ் டிராக்கர்

இன்-பில்ட் கேம்ஸ், கால்குலேட்டர் போன்ற அம்சங்கள்

விஃபிட் ஆப்

ஒரு வருட வாரண்டி

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

கிஸ்மோர் வோக் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், ஆரஞ்சு மற்றும் வைட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய கிஸ்மோர் வோக் ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட் மற்றும் கிஸ்மோர் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Tags:    

Similar News