கணினி

ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!

Published On 2023-01-02 05:08 GMT   |   Update On 2023-01-02 05:08 GMT
  • ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • முன்னதாக ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா தோற்றத்தில் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஃபயர் போல்ட் அறிமுகம் செய்தது.

ஃபயர் போல்ட் ராக்கெட் பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. ரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகி இருக்கும் புது ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ், போட், அமேஸ்ஃபிட், ரியல்மி மற்றும் இதர பிராண்டு மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

வட்ட வடிவம் கொண்ட டயல் கொண்ட ஃபயர் போல்ட் ராக்கெட் 1.3 இன்ச் HD டிஸ்ப்ளே, வலது புறம் பட்டன், IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஏராளமான வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. இத்துடன் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெப், டிஸ்டன்ஸ், கலோரி என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் கொண்டிருக்கிறது. இதனால் ப்ளூடூத் இணைப்பில் பயனர்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் ஃபயர் போல்ட் ராக்கெட் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், சில்வர் கிரே, ஷேம்பெயின் கோல்டு மற்றும் கோல்டு பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஃபயர் போல்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News