கணினி

ப்ளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகமான புது ஸ்மார்ட்வாட்ச்

Update: 2023-04-29 10:15 GMT
  • மெட்டாலிக் கேசிங் மற்றும் கிரவுன் ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.
  • இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் - ஃபீனிக்ஸ் அல்ட்ரா பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஃபயர் போல்ட் ராக் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய ஸ்மார்ட்வாட்ச் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபயர்-போல்ட் ஃபீனிக்ஸ் அல்ட்ரா மாடல் அழகிய தோற்றம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதில் உள்ள வட்ட வடிவம் கொண்ட ஸ்கிரீன் 1.39 இன்ச் அளவில், 60Hz ரிப்ரெஷ் ரேட், 240x240 பிக்சல் ரெசல்யுஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் மிக உறுதியான ஸ்டீல் டிசைன், ஷாக் ப்ரூஃப் பொருட்களால் உருவாக்கப்பட்டு இருப்பதால், இந்த ஸ்மார்ட்வாட்ச் எளிதில் சேதமடையாது. இத்துடன் 120-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் வசதி, வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

 

மெட்டாலிக் கேசிங் மற்றும் கிரவுன் ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 7 நாட்களுக்கான பேக்கப், 30 நாட்களுக்கான ஸ்டாண்ட்-பை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் மேம்பட்ட ஹெல்த் சூட் உள்ளது. இது ஹார்ட் ரேட் டிராக்கர், SpO2 டிராக்கர் மற்றும் ஸ்லீப் சைக்கிள் மாணிட்டர் போன்ற வசதிகளை வழங்குகிறது.

இத்துடன் பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு ஸ்மார்ட்வாட்ச்-இல் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இத்துடன் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்கள், தனித்துவ ரிமைண்டர்கள், வானிலை அப்டேட்களை பார்க்க முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

 

ஃபயர்-போல்ட் ஃபீனிக்ஸ் அல்ட்ரா அம்சங்கள்:

1.39 இன்ச் 240x240 பிக்சல், 60Hz டிஸ்ப்ளே

கிளாஸ் கவர், ஸ்டீல் டிசைன் மற்றும் சுழலும் கிரவுன்

ப்ளூடூத் காலிங் வசதி

கால் ஹிஸ்டரி, குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட்

இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்

100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

30 நாட்கள் ஸ்டாண்ட்பை

ஃபயர்-போல்ட் ஹெல்த் சூட்

IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்

ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஃபயர்-போல்ட் ஃபீனிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மே 1 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 1,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஃபயர்-போல்ட் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் புளூ, கோல்டு, டார்க் கிரே, சில்வர் மற்றும் ரெயின்போ என ஐந்துவித நிறங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News