கணினி

ப்ளூடூத் காலிங் வசதியுடன் புது ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-03-01 05:00 GMT   |   Update On 2023-03-01 05:00 GMT
  • போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.
  • புதிய போல்ட் ஸ்மார்ட்வாட்ச்-இல் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், சிலிகான் ஸ்டிராப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச்- போல்ட் ஸ்டிரைக்கர் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போல்ட் ஸ்டிரைக்கர் மாடலில் 1.3 இன்ச் HD டிஸ்ப்ளே, வட்ட வடிவ டயல், சிலிகான் ஸ்டிராப் மற்றும் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.

முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் போல்ட் ஸ்டிரைக்கர் ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் 100-க்கும் அதிக வொர்க் அவுட் மோட்கள், 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங், ரத்த அழுத்தத்தை மாணிட்டர் செய்யும் வசதி என ஏராளமான அம்சங்கள் உள்ளன.

 

போல்ட் ஸ்டிரைக்கர் அம்சங்கள்:

1.3 இன்ச் HD IPS LCD ஸ்கிரீன்

150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்

ப்ளூடூத் 5.1

ப்ளூடூத் காலிங்

பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்

100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

ஹெல்த் மாணிட்டரிங்

IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்

ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

போல்ட் ஸ்டிரைக்கர் ஸ்மார்ட்வாட்ச் கிரீம், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை போல்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளம், ஃப்ளிப்கார்ட்-இல் நடைபெறுகிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News