கணினி

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட போல்ட் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

Update: 2023-03-11 05:29 GMT
  • போலட் ஆடியோ நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
  • புதிய இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3, பிரீமியம் டச் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சங்களை கொண்டுள்ளது.

போல்ட் ஆடியோ நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்பட்ஸ்- கர்வ் ANC பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய போல்ட் கர்வ் ANC நெக்பேண்ட் மாடல் மெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதில் 12mm டிரைவர்கள், பூம் எக்ஸ் ரிச் பேஸ் தொழில்நுட்பம் உள்ளது. இத்துடன் ப்ளூடூத் 5.3, ப்ளின்க் அண்ட் பேர் தொழில்நுட்பம், பிரீமியம் டச் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டண்ட், IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் மேக்னடிக் டிரைவர்கள் உள்ளன.

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் போல்ட் ஆடியோ கர்வ் ANC மாடலில் 40 மணி நேரத்திற்கான பிளேடைம், ANC ஆன் செய்யப்பட்ட நிலையில், 30 மணி நேரத்திற்கான பிளேடைம் கொண்டிருக்கிறது. டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட போல்ட் ஆடியோ கர்வ் ANC பத்து நிமிட சார்ஜ் செய்தால் 15 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது.

 

கர்வ் ANC மாடலில் தலைசிறந்த காலிங் அனுபவம், அதிகபட்சம் 25db ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 60ms அல்ட்ரா லோ லேடன்சி காம்பட் கேமிங் மோட் உள்ளது. இது கேமிங்கின் போது சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. டூயல் பேரிங் வசதி இருப்பதால், இதை கொண்டு ஒரே சமயத்தில் அழைப்புகளை பேசுவது மற்றும் கேமிங் செய்ய முடியும்.

போல்ட் ஆடியோ கர்வ் ANC அம்சங்கள்:

12mm பூம் எக்ஸ் டிரைவர்கள்

ஜென் டெக் ENC

ANC மற்றும் பிரத்யேக மைக்

60ms அல்ட்ரா லோ லேடன்சி

இன்-லைன் கண்ட்ரோல்

அதிகபட்சம் 40 மணி நேர பிளேடைம்

டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங்

ப்ளூடூத் 5.3

வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்

IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

போல்ட் ஆடியோ கர்வ் ANC வயர்லெஸ் நெக்பேண்ட் மாடலின் விலை ரூ. 1,299 ஆகும். இது பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை போல்ட் ஆடியோ வலைத்தளம், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் துவங்கி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News