கணினி

ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட போட் ஸ்மார்ட்வாட்ச் - குறைந்த விலையில் அறிமுகம்!

Update: 2023-05-16 10:04 GMT
  • போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.
  • இந்த ஸ்மார்ட்வாட்ச் சிங்கில் சிப் ப்ளூடூத் 5.3 மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்- ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. போட் லூனார் கனெக்ட் ப்ரோ மாடலின் வரிசையில் புதிய ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலில் 1.91 இன்ச் HD டிஸ்ப்ளே, 2.5D வளைந்த டிசைன், 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. சீம்லெஸ் மற்றும் மெட்டல் டிசைன் கொண்டிருக்கும் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடல் ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தை அழகாகவும், ஒட்டுமொத்தமாக பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் சிங்கில் சிப் ப்ளூடூத் 5.3 மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

 

இதில் 100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள், IP68 தர டஸ்ட், ஸ்வெட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படு இருக்கிறது. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இந்த வாட்ச் ஹார்ட் ரேட் மற்றும் உடலின் சுவாச அளவுகளை டிராக் செய்கிறது. இதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியும்.

போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இந்த வாட்ச்-இல் நேரலை கிரிகெட் ஸ்கோர்கள், வானிலை அப்டேட்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயக்கும் வசதி உள்ளது.

 

போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் அம்சங்கள்:

1.91 இன்ச் HD 2.5D வளைந்த டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ்

2.5D வளைந்த டிசைன், மெட்டாலிக் ஃபிரேம்

ப்ளூடூத் 5.3

பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்

ENx மூலம் இரைச்சல் இல்லா அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி

100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள்

100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

உடல்நல டிராகிங் செய்யும் சென்சார்கள்

IP68 டஸ்ட், ஸ்வெட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

300 எம்ஏஹெச் பேட்டரி

அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி

ஸ்மார்ட் அலெர்ட்கள்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலின் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் அதிகரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் பிலாக், கூல் கிரே, டீப் புளூ மற்றும் மரூன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News