கணினி

இந்தியாவில் அறிமுகமான அமேஸ்ஃபிட் GTR மினி

Update: 2023-03-16 11:57 GMT
  • அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய GTR மினி ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவ டயல், AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
  • புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

அமேஸ்ஃபிட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அணியக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்தது. புதிய அமேஸ்ஃபிட் GTR மினி மாடலில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மிட்-ரேன்ஜ் பிரிவில் களமிறங்கி இருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் காம்பேக்ட் டிசைன், வட்ட வடிவம் கொண்டிருக்கிறது. இத்துடன் 1.28 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, பேனல், HD ரெசல்யூஷன், வளைந்த கிளாஸ் பாதுகாப்பு உள்ளது.

ஸ்மார்ட்வாட்ச்-இன் வலதுபுறம் இருக்கும் வட்ட வடிவ டயல் கொண்டு மெனு மற்றும் இதர ஆப்ஷன்களை இயக்க முடியும். மிட்-ரேன்ஜ் மாடல் என்ற போதிலும், பிரீமியம் அனுபவத்தை வழங்கும் வகையில், இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபிரேம் கொண்டிருக்கிறது.

 

புதிய அமேஸ்ஃபிட் GTR மினி மாடல் முழுமையாக சார்ஜ் செய்து பேட்டரி சேவிங் மோடில் அதிகபட்சம் 20 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. வழக்கமான பயன்பாடுகளின் போது, இந்த ஸ்மார்ட்வாட்ச் அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்கும். இத்துடன் 120-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இவைதவிர, ஹார்ட் ரேட் மாணிட்டரிங், ஸ்டிரெஸ் லெவல் மேப்பிங், SpO2 மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் புதிய அமேஸ்ஃபிட் GTR மினி மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைத்தளத்தில் நடைபெறுகிறது. புதிய அமேஸ்ஃபிட் GTR மினி மாடல் மிட்நைட் பிளாக், மிஸ்டி பின்க் மற்றும் ஓசன் புளூ என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News