கணினி

75Hz ரிப்ரெஷ் ரேட், வால் மவுன்ட் வசதியுடன் புதிய ரெட்மி மானிட்டர் அறிமுகம்!

Published On 2023-06-10 01:56 GMT   |   Update On 2023-06-10 01:56 GMT
  • இந்த மானிட்டரில் 3 மைக்ரோ-எட்ஜ் டிசைன் மற்றும் 178 டிகிரி வியூவிங் ஆங்கில் உள்ளது.
  • இந்த மானிட்டர் அதிகளவு பிரகாசமாகவும், அதிக உண்மைத்தன்மை கொண்ட நிறங்களை காண்பிக்கிறது.

ரெட்மி G27 மற்றும் G27Q கேமிங் மானிட்டர்களை தொடர்ந்து சியோமியின் துணை பிராண்டு ரெட்மி முற்றிலும் புதிய மற்றும் குறைந்த விலை மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மானிட்டர் ரெட்மி A27Q என்று அழைக்கப்படுகிறது. இதில் 2K ரெசல்யூஷன் மற்றும் IPS ஸ்கிரீன் உள்ளது.

ரெட்மி A27Q 2K IPS அம்சங்கள்:

புதிய ரெட்மி A27Q 2K IPS மானிட்டர் அன்றாட பணிகளை மேற்கொள்ளவும், பொழுதுபோக்கு சார்ந்த பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள IPS ஸ்கிரீன் 2560x1440 பிக்சல் ரெசல்யூஷன் தலைசிறந்த விஷூவல்களை அதன் உண்மை நிறங்களில் பிரதிபலிக்கிறது. இந்த மானிட்டரில் 3 மைக்ரோ-எட்ஜ் டிசைன் மற்றும் 178 டிகிரி வியூவிங் ஆங்கில் உள்ளது.

இத்துடன் HDR 10 சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இது தரவுகளுக்கு டெப்த் மற்றும் தரத்தை மேம்படுத்தி காண்பிக்கிறது. இதில் 8-பிட் கலர் டெப்த் மற்றும் 100 சதவீத sRGB சப்போர்ட், 95 சதவீதம் DCI-P3 சப்போர்ட் உள்ளது. இதன் மூலம் இந்த மானிட்டர் அதிகளவு பிரகாசமாகவும், அதிக உண்மைத்தன்மை கொண்ட நிறங்களை காண்பிக்கிறது.

ரெட்மி A27Q மானிட்டரில் 75Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இத்துடன் ப்ளூ லைட் மோட் வழங்கப்பட்டு உள்ளது. இது கண்களுக்கு சோர்வு ஏற்படுவதை பெருமளவு தடுக்கிறது. இதன் மூலம் நீண்ட நேரம் மானிட்டரை பயன்படுத்த முடியும். கனெக்டிவிட்டிக்கு DPI.4 இன்டர்ஃபேஸ், HDMI இன்டர்ஃபேஸ், யுஎஸ்பி ஏ இன்டர்ஃபேஸ், 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் யுஎஸ்பி சி இன்டர்ஃபேஸ் உள்ளது.

இதில் உள்ள யுஎஸ்பி சி இன்டர்ஃபேஸ் 65 வாட் ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த மானிட்டரை வால் மவுன்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. சீன சந்தையில் இதன் விலை 869 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 047 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News