தொழில்நுட்பம்
மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500

புதிய அப்டேட் பெறும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500

Published On 2019-07-12 15:25 IST   |   Update On 2019-07-12 15:40:00 IST
மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.500 காருக்கு புதிய அப்டேட் வழங்கியுள்ளது. புதிய அப்டேட் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.500 காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார்பிளே வசதியை சேர்த்துள்ளது. புதிய அப்டேட் மூலம் எக்ஸ்.யு.வி.500 கார் தற்சமயம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே என இரண்டு அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கனெக்ட்டெட் ஆப்ஸ், எமெர்ஜன்சி கால், ஸ்மார்ட் வாட்ச் வசதி மற்றும் இகோசென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தற்சமயம் புதிய அப்டேட் எக்ஸ்.யு.வி.500 காரின் டபுள்யூ11 வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.

ஏற்கனவே மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 டபுள்யூ11 வேரியண்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் புதிய அப்டேட் பெற முடியும். வாடிக்கையாளர்கள் தங்களது காரை அதிகாரப்பூர்வ மஹிந்திரா சர்வீஸ் மையத்தில் அப்டேட் செய்து கொள்ளலாம். 



இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 கார் 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பின் கடந்த ஆண்டு இந்த கார் அப்டேட் செய்யப்பட்டது. இந்த காரில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட எம்-ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 155 பி.எஸ். மற்றும் 360 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இதுதவிர 2.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் 140 பி.எஸ். மற்றும் 320 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டிரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் செய்ய மஹிந்திரா எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை.

இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 கார் ரூ. 12.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 19.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Similar News