- பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
அன்புடை யானை அரனைக்கூடல்
ஆலவாய் மேவியது என்கொல்என்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை
நயம்பெறப் போற்றி நலம் குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
இமையவர் ஏத்த இருப்பவர்தாமே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:- அனைத்து உயிர்களிடத்திலும் அன்புடையவனான சிவனை, கூடல் ஆலவாயில் எழுந்தருள என்ன காரணம் எனக் கேட்டு, பொன் போன்றவனாகவும், தலைவனாகவும் விளங்கும் திருநள்ளாற்று இறைவனை நயமாக போற்றி, செம்பொன் நிறைந்த மாட வீடுகளால் சூழப்பட்ட சீர்காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடுபவர்கள், தேவர்களெல்லாம் போற்றுமாறு திகழ்வர்.