ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 27.1.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வீடு வாங்கும் முயற்சி கைகூடும்

Published On 2026-01-27 07:27 IST   |   Update On 2026-01-27 07:27:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் மாறுவர். கடன் சுமை குறையும்.

ரிஷபம்

சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

துன்பங்கள் தூளாகும் நாள். நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திருப்பம் ஏற்படும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

கடகம்

இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

சிம்மம்

கடமையில் இருந்த தொய்வு அகலும் நாள். மாற்று இனத்தவர்கள் உதவியால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.

கன்னி

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பணவரவில் தாமதங்கள் ஏற்படும். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் தொல்லைகள் உண்டு.

துலாம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். எடுத்த வேலையை எளிதில் முடிக்க இயலாது. சொந்த பந்தங்களின் பகை அதிகரிக்கும்.

விருச்சிகம்

யோகமான நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு

கற்றவர்கள் ஆலோசனையால் கவலை தீரும் நாள். கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். தொழில் சீராக நடைபெறும்.

மகரம்

நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சு முடிவாகும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.

கும்பம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பக்கத்தில் இருப்பவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் நலன் கருதி கடன் வாங்கும் சூழ்நிலை உண்டு.

மீனம்

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். புதிய முயற்சி கைகூடும்.

Tags:    

Similar News