வழிபாடு
null

திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்களால் விழாக்கோலம்

Published On 2026-01-08 09:30 IST   |   Update On 2026-01-08 09:45:00 IST
  • ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் வழக்கத்தைவிட சற்று கூடுதலாக கூட்டம் காணப்படுகிறது.
  • பாத யாத்திரை பக்தர்கள் வருகையால் திருச்செந்தூர் விழாக்கோலம் கொண்டுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த ஆன்மீக சுற்றுலா தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.

இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் வழக்கத்தைவிட சற்று கூடுதலாக கூட்டம் காணப்படுகிறது.

தை முதல் நாள் பொங்கல் பண்டிகைக்கு முன்பு மார்கழி மாதம் முழுவதும் தென்மாவட்டங்களில் இருந்து குறிப்பாக தூத்துக்குடி நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக முருகன் படம் வைத்து அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்கள் முன் செல்ல பின்னால் பாடல்கள் பாடி ஆடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் வழிபாடு செய்தனர். அவ்வாறு வந்த பாதயாத்திரை பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பாத யாத்திரை பக்தர்கள் வருகையால் திருச்செந்தூர் விழாக்கோலம் கொண்டுள்ளது. தற்போது மார்கழி மாதம் என்பதால் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூபம் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. 

Tags:    

Similar News