வழிபாடு

குடும்பத்தில் மகிழ்ச்சி நிகழ்த்தும் கிருத்திகை விரதம்

Published On 2025-10-04 10:52 IST   |   Update On 2025-10-04 10:52:00 IST
  • கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
  • மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி, உணவு அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

கிருத்திகை விரதம் என்பது முருகப்பெருமானை வழிபடுவதற்காக அனுசரிக்கப்படும் ஒரு விரதமாகும். இது முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படும் கிருத்திகை நட்சத்திரத்தன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதத்தை மேற்கொள் வதன் மூலம் பாவங்கள் நீங்கும், திருமணத்தடைகள் நீங்கும் மற்றும் முருகனின் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முருகப் பெருமானுக்கு உகந்த நாள்: கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

பாவங்கள் நீங்கும்: இந்த விரதத்தை கடைபிடிப்பதால், பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.

திருமணத்தடை நீங்கும்: திருமணத்திற்காக காத்திருப்பவர்கள், கிருத்திகை விரதம் இருந்தால், திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். முருகனின் அருள் கிடைக்கும. இந்த விரதத்தை முறையாக கடைபிடிப்பதால், முருகனின் அருளும், ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும்.

கிருத்திகை விரதம் கடை பிடிக்கும் முறை: அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, முருகனின் படம் அல்லது சிலையை வைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முருகனுக்கு பிடித்தமான மலர்கள் மற்றும் நைவேத்தியங்களை படைத்து வழிபடலாம். விரதம் இருப்பவர்கள், பால், பழம் அல்லது எளிமையான உணவுகளை உட்கொள்ளலாம். முருகனுக்குரிய மந்திரங்கள், பாடல்களை பாராயணம் செய்யலாம். யாருக்காவது அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி, உணவு அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

சிலர் கிருத்திகை விரதத்தை பரணி நட்சத்திரத்திலிருந்தே தொடங்குகிறார்கள். அன்று பகல் உணவை நிறுத்தி விட்டு, கிருத்திகை அன்று முருகனை வழிபடுகிறார்கள்.

ஆடி கிருத்திகை, தை கிருத்திகை போன்ற நாட்களும் முருகனுக்கு மிகவும் முக்கியமான நாட்களாகும். இந்த விரதத்தை கடைபிடிப்பதால், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும் என்பது நம்பிக்கை.

Tags:    

Similar News