வாயில் கருப்பு துணி கட்டி புதுவை இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்திய காட்சி.
வாயில் கருப்பு துணி கட்டி புதுவை இளைஞர் காங்கிரசார் போராட்டம்
- புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலை அருகே மவுன போராட்டம் நடந்தது.
- கையிலும், வாயிலும் கறுப்பு துணி கட்டியிருந்தனர்.
புதுச்சேரி:
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத மத்திய மோடி அரசையும் மற்றும் மாநில பா.ஜனதா அரசையும் பதவி விலக வலியுறுத்தி புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலை அருகே மவுன போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக புதுவை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மாநில பொதுச்செயலாளர் தனுசு, திருமுருகன் இளையராஜா, வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டியன, மாநில செயலாளர் செந்தில், சந்திரிகா மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ரத்னா, பேபி, எழில், ஜெயலட்சுமி பானு வரலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் பெருமாள், குருமூர்த்தி, சத்யநாராயணன், பிரதீப், விக்னேஷ், சித்தீக், முகிலன், தமிழரசன், மனோஜ், ராஜ் கெனேடி, வினோத், ஜனா, மாவட்ட நிர்வாகிகள் பிரவீன், கார்த்திகேயன், பாலா, விக்னேஷ், தொகுதி நிர்வாகிகள் கண்ணன், ராஜேஷ், சுகல், உதயா, மாறன், ஹரீஷ், நௌபல், பாலாஜி, அந்த்வான், சூரியா, அத்வானி, ஆகாஷ் உள்ளிட்ட இளைஞர் காங்கிரசார் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மற்றும் மணிப்பூர் மாநில முதல் அமைச்சரை கண்டித்தும் பதாகைகள் வைத்திருந்தனர். கையிலும், வாயிலும் கறுப்பு துணி கட்டியிருந்தனர்.
காமராஜர் சிலை முன்பு இளைஞர் காங்கிரசார் பதாகை ஏந்தி வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்திய காட்சி