கோப்பு படம்.
மனைவி, மைத்துனர் மீது வாலிபர் தாக்குதல்
- பரமேஸ்வரி தட்டிக் கேட்ட போது நாகராஜன் தகாத வார்த்தைகளால் திட்டி பரமேஸ்வரியை தாக்கினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை உருளையன் பேட்டை அருந்ததி நகரை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது38). இவரது மனைவி பரமேஸ்வரி. நாகலிங்கத் துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது.
இதனை பரமேஸ்வரி தட்டிக் கேட்கும் போதெல்லாம் அவரை நாகராஜன் குடித்து விட்டு அடித்து துன்புறுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குயவர் பாளையம் அய்யனார் கோவில் வீதியில் நாகராஜன் ஒரு பெண் வீட்டில் இருப்பதாக பரமேஸ்வரிக்கு தகவல் வந்தது.
இதையடுத்து பரமேஸ்வரி தனது சகோதரர் முருகனை அழைத்து கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது அந்த வீட்டில் இருந்து நாகராஜன் ஒரு பெண்ணுடன் வெளியே வந்தார். இதனை பரமேஸ்வரி தட்டிக் கேட்ட போது நாகராஜன் தகாத வார்த்தைகளால் திட்டி பரமேஸ்வரியை தாக்கினார்.
இதனை தடுக்க முயன்ற பரமேஸ்வரியின் சகோதரர் முருகனையும் சிமெண்டு ஓட்டால் தாக்கி இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இந்த தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வரி மற்றும் அவரது சகோதரர் முருகன் ஆகிய இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து பரமேஸ்வரி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.