மாணவர்கள் யோகாசனம் செய்த காட்சி.
3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி
- ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெற்றது.
- மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கிய யோகாசன ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை ஆதித்யா வித்யாஷ்ராம் பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 3 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 3,300-க்கும் மேற்பட்டமாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் 10 மாணவிகள் செய்த ரிதமிக் யோகா நடனம், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியின் தன்மைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
3 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்வில் 17 வகை யோகாசனம், 3 வகை பிராணாயாமம், கபாளபதி, தியான முத்திரை மற்றும் சங்கல்பா பயிற்சிகளை செய்து காண்பித்து தங்களது திறமைகளை் வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்ய நாராயணா அறக்கட்டளை நிர்வாகி அனுதா பூனமல்லி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.
முடிவில் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கிய யோகாசன ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், இயக்குனர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.