விநாயக மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில்உலக பூமி தின ஓவிய போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்ற போது எடுத்த படம்.
- விநாயக மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.
- சுற்றுச்சூழல் பாதுகாத்தலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
புதுச்சேரி:
புதுவை கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் வழிகாட்டுதலின்படி சுற்றுச்சூழல் இயக்கம் சார்பில் உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு புதுவை பிரிவு இயக்குனர் பொறுப்பு ஆண்ட்ரூ ஜான் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக புதுவை பல்கலை கழக சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாத்தலின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த போட்டியில் சிறந்த படைப்பிற்கு ரொக்க பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முடிவில் இதயவியல் தொழில் நுட்ப துறை விரிவுரையாளர் குளோரி மெர்லின் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அதிகாரி சந்துரு மற்றும் துணை பேராசிரியர் வளர்மதி, விரிவுரையாளர்கள் சந்தோஷ், கோவர்தன விஷ்ணு, சிவசங்கரி, கல்லூரி சுற்றுச்சூழல் இயக்க மாணவர்கள் செய்து இருந்தனர்.