புதுச்சேரி

உலக மிதிவண்டி தின பேரணியை இன்ஸ்பெக்டர் கணேசன் தொடங்கி வைத்த காட்சி.

உலக மிதிவண்டி தின பேரணி

Published On 2023-06-06 06:40 GMT   |   Update On 2023-06-06 06:40 GMT
  • இன்ஸ்பெக்டர் கணேசன் தொடங்கி வைத்தார்
  • மாணவர்கள் பின்பற்ற வேண்டிய போக்கு வரத்து விதிகளை பற்றியும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் எடுத்துரைத்தார்.

புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் ஆறு படைவீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் விநாயக மிஷன் ஆராய்ச்சி நிறுவ னத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில் உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு மிதி வண்டி பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி கல்லூரியின் டீன் டாக்டர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் படி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் இயக்கு னர் (பொறுப்பு) ஆன்ட்ரூ ஜான் முன்னிலை வகித்தார்.

சுற்றுசூழல் மாசுபாட்டை தடுக்க வலியுறுத்தி நடை பெற்ற நிகழ்ச்சிக்கு கிருமாம் பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமை தாங்கி கொடியசைத்து மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில் கல்வி ஒருங்கி ணைப்பாளர்கள் வளர்மதி, வெண்ணிலா, சப்-இன்ஸ்பெக் டர் பாஸ்கரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக மிதிவண்டி தின கொண்டாடுவதன் முக்கியத்து வத்தையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய போக்கு வரத்து விதிகளை பற்றியும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் எடுத்துரைத்தார்.

சைக்கிள் பேரணி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடங்கி கிருமாம் பாக்கம், பிள்ளையார் குப்பம் பனித் திட்டு வழியாக சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது.

இதில் 40 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணிக் கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், கோவர்த விஷ்ணு மற்றும் மாணவர்கள், இளைஞர் மன்ற அமைப்பினர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News