புதுச்சேரி

எம்.ஐ.டி என்ஜினீயரிங் கல்லூரியில் பயிலரங்கம் நடைபெற்ற காட்சி.

எம்.ஐ.டி என்ஜினீயரிங் கல்லூரியில் பயிலரங்கம்

Published On 2023-10-13 08:07 GMT   |   Update On 2023-10-13 08:07 GMT
கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் தொடர்பு திட்டம் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.

புதுச்சேரி:

புதுச்சேரி கலிதீர்த்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக் னாலஜி மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து சிறப்பு பயிலரங்கத்தை நடத்தியது.

இதில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மற்றும் மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் தொடர்பு திட்டம் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தில் தக வல் தொலைத்தொடர்பு, அதனை சார்ந்த முக்கிய அறிவு சார் கலந்துரையாடல் நடைபெற்றது.

இப்பயிலரங்கத்தை எம்.ஐ.டி கல்லூரி தலை வர் மற்றும் நிர்வாக இயக் குனர் தனசேகரன், செய லாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர ராஜராஜன், கல்லூரி முதல்வர் மலர்க்கண் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சி யினை தொடங்கி வைத்தனர்.

பிக்ஷாம் வர வேற்றார். தொடர்ந்து இந் திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தின் நடவடிக்கை கள் குறித்து ராஜு விளக்கினார். மேலும் இந்திய தொலைத் தொடர்பு சேவை இயக் குனர் விநனையா மற்றும் ஸ்ரீகாந்த் சைபர் செக்யூ ரிட்டி குறித்து சிறப்புரையாற்றினர்.

இப்பயில ரங்கில் பி.எஸ்.என். எல், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் பிரதிநிதி கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News