புதுச்சேரி

கோப்பு படம்.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-07-11 11:47 IST   |   Update On 2023-07-11 11:47:00 IST
  • புதுவை முத்தியால்பேட்டை தெபேஸ்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்ராஜ்.
  • கூலி தொழிலாளி மரிஜோஸ்பின் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை தெபேஸ்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்ராஜ். கூலி தொழிலாளி மரிஜோஸ்பின் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக லாரன்ஸ் ராஜ் வேலைக்கு எதுவும் செல்லாமல் மது குடித்து வந்தார். இதனை அவரது மனைவி மரிஜோஸ்பின் தட்டிக்கேட்ட போது 2 முறை லாரன்ஸ்ராஜ் தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து மரிஜோஸ்பின் புதுவை நேரு வீதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று லாரன்ஸ்ராஜ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி மரிஜோஸ்பின் இப்படி வேலைக்கு எதுவும் செல்லாமல் மது குடித்து விட்டு வருகிறீர்களே என்று கண்டித்தார். பின்னர் மரிஜோஸ்பின் சமையல் அறைக்கு சென்று சமையல் செய்து கொண்டிருந்தார்.

மனைவி கண்டித்ததால் மனமுடைந்த லாரன்ஸ்ராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து படுக்கை அறைக்கு சென்று மின்விசிறியில் துப்பட்ட வால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News