புதுச்சேரி

ஆதி திராவிடர் நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணையை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணை

Published On 2023-04-22 13:58 IST   |   Update On 2023-04-22 13:58:00 IST
  • அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
  • பா.ஜனதா பிரமுகர் காட்டேரிக்குப்பம் போட்டோ ராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பிரதம மந்திரி கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருக்கனூரில் நடைபெற்றது.

விழாவிற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி 35 ஆதி திராவிட பயனாளி களுக்கு வீடு கட்டுவதற்கு முதல் தவணையாக 2 லட்சத்தி ற்கான பணி ஆணையினை வழங்கினார். தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு அடை யாள அட்டை யினையும் வழங்கினார்.

இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ அருள்முருகன், பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், பா.ஜனதா பிரமுகர் காட்டேரிக்குப்பம் போட்டோ ராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News