புதுச்சேரி

பெண்கள் முற்போக்கு கழக கூட்டம் நடந்த காட்சி.

மகளிர் உரிமை தொகையை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும்

Published On 2023-09-22 14:00 IST   |   Update On 2023-09-22 14:00:00 IST
  • முற்போக்கு கழக மாநாட்டில் தீர்மானம்
  • பெண்கள் அனைத்து பஸ்களிலும் இலவசமாக பயணிக்க அறிவிப்பு செய்ய வேண்டும்.

புதுச்சேரி:

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் புதுவை மாநில 9-வது மாநாடு புதுவை தமிழ் சங்கத்தில் நடந்தது.

மாநாட்டிற்கு மல்லிகா, மீனாட்சி, அற்புத மேரி தலைமை வகித்தனர். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக புதுவை மாநில செயலாளர் விஜயா வரவேற்றார். மாநாடை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட்டு - லெனினிஸ்ட் மாநில செயலர் புருஷோத்தமன் தொடங்கி வைத்தார். தேசிய தலைவர் டாக்டர் ரத்திராவ் சிறப்புரையாற்றினார். மத்திய கமிட்டி உறுப்பினர் முருகன், மாவட்ட செயலர் முருகன் ஆகியோர் பேசினர். வேலை அறிக்கையை மாநில செயலாளர் விஜயா சமர்பித்தார்.

மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மகளிர் ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மகளிர் உரிமைத்தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும். பெண்கள் அனைத்து பஸ்களிலும் இலவசமாக பயணிக்க அறிவிப்பு செய்ய வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ரேஷன்கடைகளை திறக்க வேண்டும். நகர்ப்புற வேலை உறுதி திட்டம் கொண்டுவர வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News