புதுச்சேரி

கோப்பு படம்.

சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை ஆலோசனை

Published On 2023-04-19 15:15 IST   |   Update On 2023-04-19 15:15:00 IST
  • புதுவையில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
  • கொரோனாவுக்கு முதியவர் பலியாகியுள்ளார்.

புதுச்சேரி:

நாடு முழுவதும் சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

புதுவையிலும் சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து பின் குறைந்தது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு முதியவர் பலியாகியுள்ளார். இதனால் புதுவையில் கொரோனாவுக்கு பலியா னவர்கள் எண்ணிக்கை 1,979 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியது. இதையடுத்து புதுவை கவர்னர் தமிழிசை சுகாதாரத்துறை அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், கவர்னரின் தனி செயலாளர் அபிஜித்விஜய் சவுத்ரி, இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் அரசு மருத்துவமனைகளின் முதல்வர், மருத்துவ கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மத்திய அரசின் சுகாதார திட்டங்கள் செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News