புதுச்சேரி

கோப்பு படம்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ரங்கசாமி மாநில அந்தஸ்தை குறிப்பிடாதது ஏன்?

Published On 2023-07-08 13:55 IST   |   Update On 2023-07-08 13:55:00 IST
  • எதிர்கட்சி தலைவர் சிவா கேள்வி
  • மது அதிகாரம் இல்லாத போது மாநில அந்தஸ்தை கையில் எடுப்பதும் பிறகு அதை கிடப்பில் போடுவதும் எந்த விதத்தில் நியாயம்?

புதுச்சேரி:

புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிதி பிரச்சினை சம்பந்த மாக எந்த அறிவிப்பும் செய்யாமல் மத்திய நிதி மந்திரி சென்றது புதுவை மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பெஸ்ட் புதுவை என சொல்லி சென்றார்.

ஆனால் அவர் சொல்லி விட்டுச் சென்ற இந்த 2 ஆண்டில் ஒர்ஸ்ட் புதுவையாக மாறியுள்ளது.

இப்படி ப்பட்ட சூழலில் வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மத்திய மந்திரிகள் புதுவைக்கு படையெடுத்து அரசு பணத்தில் நலத்திட்டம் என்ற போர்வையில் தேர் தல் பிரச்சார கூட்டத்தை தொடங்கி யுள்ளனர்.

10 லட்சம் வாக்காளர்கள் கொண்ட புதுவை மாநிலத்தில் லட்சத்து 41 ஆயிரம் பயனாளிகளுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டது என்றால் தொகுதிக்கு எவ்வளவு பயனாளிகளுக்கு எந்தெந்த திட்டத்தில் எவ்வளவு தொகை கடனாக வழங்கப்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும்.

புதுவையை சிறந்த மாநிலமாக மாற்ற சிரமமாக உள்ளது என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்- அமைச்சர் தமது வேதனையை சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இப்போதாவது முதல்- அமைச்சர் உணர்ந்து கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தியது வரவேற்கத் தக்கது.

ஆனால் அதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் உள்ள மாநில அந்தஸ்து குறித்து அந்த கடித்தத்தில் குறிப்பிடாதது

ஏன்? மாநில அரசு அதிகாரத்திற்கு மாநில அந்தஸ்து தேவை என அடிக்கடி தனது குமுறலை வெளிப்படு த்தியவர் ரங்கசாமி தான்.

கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப் பட்ட மாநில அந்தஸ்து தீர்மானம் இன்னும் கவர்னர் மாளிகையில் தூங்குகிறது. இதற்கு என்ன அர்த்தம். தமது அதிகாரம் இல்லாத போது மாநில அந்தஸ்தை கையில் எடுப்பதும் பிறகு அதை கிடப்பில் போடுவதும் எந்த விதத்தில் நியாயம்?

தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம் என்ன? புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதா? இல்லையா? இதற்கு முதல்- அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News