புதுச்சேரி
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனை முதல்-அமைச்சர் ரங்கசாமி சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்ற காட்சி. அருகில் கவர்னர் தமிழிசை உள்ளார்.
நிர்மலா சீத்தாராமனுக்கு புதுவையில் வரவேற்பு
- புதுவைக்கு கார் மூலம் வந்த அவரை கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
- போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் பூங்கொத்து அளித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனை வரவேற்றனர்.
புதுச்சேரி:
புதுவைக்கு அரசு முறை பயணமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் இன்று வந்தார்.
சென்னையில் இருந்து புதுவைக்கு கார் மூலம் வந்த அவரை கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ. ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய்.ஜெ. சரவணன்குமார், தலைமைச் செயலர் ராஜீவ்வர்மா, போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் பூங்கொத்து அளித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனை வரவேற்றனர்.