புதுச்சேரி

விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு பங்கேற்றனர்.

முதல்-அமைச்சரோடு இணைந்து பழங்குடியினர் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்

Published On 2023-11-15 09:24 GMT   |   Update On 2023-11-15 09:24 GMT
  • கவர்னர் தமிழிசை உறுதி
  • முத்ரா வங்கி திட்டத்தில் 4ல் ஒருவருக்கு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு கடன் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.

புதுச்சேரி:

ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் பழங்குடியினர் கவுரவ தின விழா கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த விழா காணொளி காட்சி மூலம் புதுவை கம்பன் கலையரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. புதுவை ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் நடந்த பழங்குடியினர் கவுரவ தின விழாவுக்கு தலைமை செயலர் ராஜீவ் வர்மா வரவேற்றார். கலெக்டர் வல்லவன் முன்னிலை வகித்தார்.

கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வ கணபதி எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு செயலர்கள் முத்தம்மா, கேசவன், துறை இயக்குனர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பழங்குடியினர் தலைவர் பகவான்பிர்சா முண்டா உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

பழங்குடியின மக்களை கவுரவிக்கும் விழா. நாட்டின் விடுதலைக்காக பழங்குடியின மக்கள் போராடிய சான்றுகள் இருந்தாலும் வெளியே தெரியவில்லை. பிரதமர் அவர்கள் நலனில் அக்கறை கொண்டு பகவான் மிர்சா முண்டா பிறந்த நாளை பழங்குடியினர் விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதுவை மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்கு உரிய மரியாதை, இட ஒதுக்கீடு அளித்து வருகிறது. 2016-ல் இருளர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் அனைத்து திட்டங்கள், வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல இடங்களில் வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

பழங்குடியின மக்களுக்கு பல திட்டங்களை பிரதமர் அறிவித்துள்ளார். அவர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் நமது லட்சியம், வளர்ச்சி யடைந்த பாரதம் என்ற வாகன பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.

புதுவையில் பழங்குடி யின மக்களுக்கு பல திட்ட ங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களுக்கு மருத்துவ வசதி, சாலை, பள்ளிகள் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாரிகள் சில கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என தகவல்கள் அனுப்பியுள்ள னர்.

முதல்-அமைச்சரோடு இணைந்து புதுவை மாநில பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அனைத்தை யும் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறோம்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் பழங்குடியினர்கள்.

தெலுங்கானாவில் 12 சதவீதம் பழங்குடியின மக்கள் உள்ளனர். அவர்களில் 6 கிராமங்களை தத்தெடுத்து பணிகளை செய்து வருகிறோம். இன்னும் அவர்களுக்கான வசதிகள் செய்துதரப்படா மல் உள்ளது.

பிரதமர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பழங்குடியின மக்களுக்கான பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். முத்ரா வங்கி திட்டத்தில் 4ல் ஒருவருக்கு எஸ்.சி.,

எஸ்.டி. வகுப்பினருக்கு கடன் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். அவர்களின் வங்கி கடனுக்கு சகோதரனாக நான் கியாரண்டி என தெரிவித்தார்.

பழங்குடியினர் தயாரிக்கும் கைவினை பொருட்கள் விற்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

வெளிநாடு செல்லும்போது வெளிநாடு தலைவர்கள் பரிசு பொருட்களில் அதிகளவில் பழங்குடியினர் தயாரிக்கும் பொருட்கள் உள்ளது. பழங்குடியினர் வளர்ச்சிக்கு பிரதமரோடு இணைந்து புதுவை அரசும் செயல்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News