தேசிய கருத்தரங்கினை விநாயகா மிஷன் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதீர், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் டீன் செந்தில்குமார் தொடங்கி வைத்த காட்சி.
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைதேசிய அளவிலான கருத்தரங்கு
- இருதய அறுவை சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் ஸ்ரீ வர்த்தினி பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.
- கருத்தரங்கின்போது கரு ரத்த ஓட்ட சுழற்சி குறித்த விழிப்புணர்வு காணொளியும் வெளியிடப்பட்டது.
புதுச்சேரி:
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகம் மற்றும் சென்னை ஆறுபடைவீடு தொழில் நுட்பக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் இருதய சிகிச்சை மற்றும் இருதய அறுவை சிகிச்சை தொழில்நுட்ப பிரிவின் மூலம் "இருதய அறுவை சிகிச்சை தொழில்நுட்ப முறைகள்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடத்தப்பட்டது.
கருத்தரங்கிற்கு துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக விநாயகாமிஷன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். சுதீர் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக பெங்களூரு பி.ஜி. எஸ் குளோபல் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மூத்த விரிவுரையாளர் ஜினோவா ஜேம்ஸ், சப்தகிரி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விரிவுரையாளர் ஜான் பீட்டர் பேட்ரிக், அபுதாபின் அல் ஹலி மருத்துவமனை மூத்த இருதய சிகிச்சை பிரிவு தொழில்நுட்பவியலாளர் பசலர் ரஹ்மான், சென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளர் பிரியங்கா மற்றும் பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் ஸ்ரீ வர்த்தினி பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து செயல்முறை விளக்கப் பயிற்சியும் நடத்தப்பட்டது மேலும் மாணவர்களுக்கிடையே படவிளக்க காட்சி ஆராய்ச்சி கட்டுரை விளக்கம் சார்ந்த போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில் இருதய சிகிச்சை பிரிவு மற்றும் இருதய அறுவை சிகிச்சை பிரிவை சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து துறையின் நுன்கலை அமைப்பிற்கு அன்பளிப்பினை வழங்கினர். மேலும் கருத்தரங்கின்போது கரு ரத்த ஓட்ட சுழற்சி குறித்த விழிப்புணர்வு காணொளியும் வெளியிடப்பட்டது
இதற்கான ஏற்பாட்டிகளை துறையின் இருதய சிகிச்சை பிரிவு மற்றும் இருதய அறுவை சிகிச்சை பிரிவு உதவி பேராசிரியர்கள் சுபாஷினி, அட்சயா, சுஷ்மிதா, தாமினி, சிவரஞ்சனி, ராகுல், ஆயிஷா ஆகியோர் செய்திருந்தனர்.