தனியார் கம்பெனிக்கு எதிராக வாய்க்கால் ஓடை கிராம மக்கள் போராட்டம் நடத்திய காட்சி.
தனியார் கம்பெனிக்கு எதிராக கிராம மக்கள்- 2-வது நாளாக போராட்டம்
- பாகூர் தொகுதி வாய்க்கால் ஓடை கிராமத்தில் தனியார் கொசுவத்தி கம்பெனி இயங்கி வருகிறது.
- இந்த ரசாயன டேங்க் நிலத்துக்கு அடியில் புதைத்தால் அப்பகுதி கிராமத்திற்கு தீங்கு விளைவிக்கும் மேலும் நிலத்தடி நீர் பாதிக்கும் என அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் திரண்ட னர்.
புதுச்சேரி:
பாகூர் தொகுதி வாய்க்கால் ஓடை கிராமத்தில் தனியார் கொசுவத்தி கம்பெனி இயங்கி வருகிறது.
இந்த கம்பெனியில் கொசுவத்தி, கொசு ஒழிப்பதற்கான ராசாயணம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கம்பெனிக்கு என புதியதாக ராட்ச கெமிக்கல் டேங்க் ஒன்று கண்டெய்னர் லாரியில் வந்தது.
இந்த ரசாயன டேங்க் நிலத்துக்கு அடியில் புதைத்தால் அப்பகுதி கிராமத்திற்கு தீங்கு விளைவிக்கும் மேலும் நிலத்தடி நீர் பாதிக்கும் என அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் திரண்ட னர்.
பின்னர் லாரியை சிறை பிடித்தனர். ஏற்கனவே இந்த தொழிற்சாலையில் 3-க்கும் மேற்பட்ட பாய்லர்கள் இருந்து வருவதாகவும் இந்த டேங்க் வைத்தால் மேலும் பாதிப்பு ஏற்படும் என்று சாட்டினர்.
தகவல் அறிந்தவுடன் கிருமாம்பாக்கம் போலீசார் அப்பகுதி மக்களை சமாதானம் செய்து வைத்து அனுப்பினர். ஆனால் டேங்கரை கம்பெனிக்குள் எடுத்துச் செல்ல அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த வாகனம் கடலூர்-புதுவை ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கம்பெனிக்குள் ராட்சச டேங்க் வந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடு வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று 2-வது நாளாக அப்பகுதி மக்கள் பாதைகைகளுடன் சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.