புதுச்சேரி

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பா.ம.க. அலுவலகத்தில் மறைந்த காடுவெட்டி குருவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஒன்றிய செயலாளர் ரகு என்கிற ராகவேந்திரன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு நினைவு தினம் அனுசரிப்பு

Published On 2023-05-25 13:44 IST   |   Update On 2023-05-25 13:44:00 IST
  • குருவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வீர வீரவணக்கம் செலுத்தினர்.
  • காடுவெட்டி குருவின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்தின் முன் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி:

திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாம.க. கட்சி அலுவலகம் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ரகு என்கிற ராகவேந்திரன் தலைமை தாங்கினார்.

 மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், பா.ம.க. மாவட்ட தலைவர் பாவாடைராயன் ஆகியோர் முன்னிலையில் காடுவெட்டி குருவின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்தின் முன் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் குருவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வீர வீரவணக்கம் செலுத்தினர்.

இதில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வி.சி ஆறுமுகம், பா.ம.க. மாவட்ட துணை தலைவர் கோட்டக்கரை ஏழுமலை, வீரபாண்டி, முன்னாள் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் முத்துக் குமார், பா.ம.க. முன்னாள் ஒன்றிய தலைவர் மணி வண்ணன், வன்னியர் சங்க மாவட்ட துணை தலைவர் சந்திரன்,

முன்னாள் ஒன்றிய செயலாளர் சவுந்தர், முன்னாள் ஒன்றிய தலைவர் முத்து, வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் கோட்டக்கரை சின்னக் கண்ணு பிரகாஷ், நிர்வாகிகள் சிங்காரவேலு, மூர்த்தி, பற்குணம், பசுமைத்தாயகம் வடிவேல், விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News